Inglés request for "துள்ளுதடி வளசு (Thulludhadi Valasu)"
Help translate from Tamil to Inglés song துள்ளுதடி வளசு (Thulludhadi Valasu) by Venba (OST)
Requested by:
fatkittens
on 9 Ago 2023 - 12:08
Letra original
Tamil
Traducción
Inglés
துள்ளுதடி வளசு
பொன்னியில முத்தெடுத்து
தங்கத்த சேத்து வச்சு
ஒன்னாக மாவரச்சு
ஓமத்த தூவி வச்சு
நீரூத்தி நெய் பெனஞ்சு - தகதக
தீமூட்டி ஆவி செஞ்சு
சுத்தி சுத்தி வந்து
சுழலாகுதே நெஞ்சு
சீரா வெந்தாச்சு
ஜோரா வந்தாச்ச
துள்ளுதடி வளசு அத நெனச்சு நச்சு
கொல்லுதடி மனசு சுகமா பிச்சு பிச்சு
தின்னுதடி வயசு கெரகம் புடிச்சு
நெருப்பா போச்சு பெருமூச்சு
பொங்கரிசி மாவரைச்சு
வெல்லத்த நீர் கரைச்சு
சிந்தாம சிதராம குழியோட
ஒன்னொன்னா ஊத்து
ஒரு பக்கம் நெய்வருத்து
மருபக்கம் பொரட்டி போட்டாச்சு
கருகரு கருப்பட்டி பொடி தூவி
கடிச்சாலே கிறுக்கேறும் பாரு பாரு
துள்ளுதடி வளசு அத நெனச்சு நச்சு
கொல்லுதடி மனசு சுகமா பிச்சு பிச்சு
தின்னுதடி வயசு கெரகம் புடிச்சு
நெருப்பா போச்சு பெருமூச்சு
வங்காள வலை விரிச்சு
வவ்வாலு மீன் புடிச்சு
கழுவித்தான் தோலுரிச்சு
பொடி காரத்தில் தோச்செடுத்து
கடலெண்ணெயில வறுத்து
சுடச்சுட கல்லுப்பு மிளகத் தட்டு
ஒரு வாசம் போதாதா?
தெருவெல்லாம் பேசாதா?
எச்சி ஊராதா?
உச்சி கொட்டாதா?
துள்ளுதடி வளசு அத நெனச்சு நச்சு
கொல்லுதடி மனசு சுகமா பிச்சு பிச்சு
தின்னுதடி வயசு கெரகம் புடிச்சு
நெருப்பா போச்சு பெருமூச்சு
பசு நெய்ய காய வச்சு
மிளகாய காம்பொடச்சு
கடுகோடும் பருப்போடும்
பெருங்காயம் சீரகம் சேத்து
மத்தாப்பா பொங்கி வந்து
பட்டாசப் போல் வெடிச்சு
ருசியாக தாளிக்க
தீபாவளியே வந்தாச்சு வந்தாச்சு
துள்ளுதடி வளசு அத நெனச்சு நச்சு
கொல்லுதடி மனசு சுகமா பிச்சு பிச்சு
தின்னுதடி வயசு கெரகம் புடிச்சு
நெருப்பா போச்சு பெருமூச்சு
ஆட்டுக்கால் வேக வச்சு
மல்லி மஞ்சளரச்சு
காரம் தேங்கா கலந்து
சூடா கொழம்போட ஊரவச்சு
கொதிக்கிற அழப்பாரு
கொழம்புல குதிக்கிற குறும்பப் பாரு
நெனச்சாலே நெஞ்செல்லாம்
ருசிபாக்க கெஞ்சும்
கைவச்சா ஒருசொட்டும் மிஞ்சாது
துள்ளுதடி வளசு அத நெனச்சு நச்சு
கொல்லுதடி மனசு சுகமா பிச்சு பிச்சு
தின்னுதடி வயசு கெரகம் புடிச்சு
நெருப்பா போச்சு பெருமூச்சு
நாட்டுகோழி வாங்கி வந்து
இஞ்சி பூண்டு மிளகா அரச்சு
எலுமிச்சம் சாரோட சாந்தாக்கி
கரியெல்லாம் பூசு
மெதுவாக மேல் வருத்து
மறுபக்கம் பொறட்டிப் போட்டு
பசிகொண்ட உசுருக்கு
சொர்க்கம்னா என்னானு காட்டு!
துள்ளுதடி வளசு அத நெனச்சு நச்சு
கொல்லுதடி மனசு சுகமா பிச்சு பிச்சு
தின்னுதடி வயசு கெரகம் புடிச்சு
நெருப்பா போச்சு பெருமூச்சு
[துள்ளுதடி வளசு அத நெனச்சு நச்சு
கொல்லுதடி மனசு சுகமா பிச்சு பிச்சு
தின்னுதடி வயசு கெரகம் புடிச்சு
நெருப்பா போச்சு பெருமூச்சு]
Inicia sesión o regístrate para publicar traducciones.













