Αγγλικά request for "அன்பாளனே (Anbaalane)"

Help translate from Ταμίλ to Αγγλικά song அன்பாளனே (Anbaalane) by A. R. Rahman
Requested by: juderegy juderegy on 12 Φεβ 2024 - 22:27
Submitter's comments:

The song is so poetic that I am reluctant to use simple words.

Συνδρομή Συνδρομή
Πρωτότυποι στίχοι
Ταμίλ
Μετάφραση
Αγγλικά

அன்பாளனே

ஆண் : எல்லாமும் இங்கே
அல்லாவும் நானே ஆகும்
பொல்லாத காலம்
கண்ணீரில் கோலம் போடும்
 
ஆண் : ஓடை இல்லாமல் போகின்ற ஓடத்திலே
ஓய்ந்தேனே ஓயாத சோகத்திலே
தீயில் பஞ்சாகி வேகின்ற நேரத்திலே
ஓஓ… ஓஓ…
 
ஆண் : வல்லோனே நான் உன்னை காண்பேனோ
துன்பத்திலே சொல் சொல் சொல்
 
ஆண் : அன்பாளனே சொல் அருளாளனே சொல்
அன்பாளனே சொல் சொல் சொல்
அன்பாளனே சொல் அருளாளனே சொல்
அன்பாளனே சொல் சொல் சொல்
 
ஆண் : எல்லாமும் இங்கே
அல்லாவும் நானே ஆகும்
பொல்லாத காலம்
கண்ணீரில் கோலம் போடும்
 
ஆண் : ஓடை இல்லாமல் போகின்ற ஓடத்திலே
ஓய்ந்தேனே ஓயாத சோகத்திலே
தீயில் பஞ்சாகி வேகின்ற நேரத்திலே
ஓஓஓ…. ஓஓஓ…
 
ஆண் : நல்லோருக்கு ஓர் தீங்கு செய்தேனில்லை
நம்பிக்கை துரோகத்தை சேர்ந்தேனில்லை
ஆனாலும் அல்லா நீ ஏன் என் மேல் கோபம் கொண்டாய்
ஓஓஓ…. ஓஓஓ…
 
ஆண் : பொய்வேடம் நான்
என்றும் இட்டேன் இல்லை
இல்லாரின் கைக்காசை
தொட்டேன் இல்லை
 
ஆண் : ஆனாலும் அல்லா நீ ஏன்
என்னை தீயாய் சுட்டாய்
ஓஓஓ…. ஓஓஓ…
 
ஆண் : சேதாரம் ஆனாலும் அல்லாஹ் உன்
அன்பாலே தீரும் துயர் யாவும்
ஆதாரம் நீ ஆனால் எல்லாமே
கை சேர பாரம் பறந்தோடும்
 
ஆண் : எல்லாமும் இங்கே
அல்லாஹ் உன்னாலே ஆகும்
 
ஆண் : ஓடை இல்லாமல் போகின்ற ஓடத்திலே
ஓய்ந்தேனே ஓயாத சோகத்திலே
தீயில் பஞ்சாகி வேகின்ற நேரத்திலே
ஓஓஓ…. ஓஓஓ…
 
முனகல் : …………..
 
ஆண் : முன்னேறி முன்னாலே வந்தோர் உண்டு
முள் மீதே கால் வைத்து சென்றோர் உண்டு
என்றாலும் அல்லாஹ்
உன் அன்பின்றி வெல்வார் உண்டோ
ஓஓஓ….
 
ஆண் : தன் போக்கில் எங்கேயும் செல்வர் உண்டு
தள்ளாடி பின்னாலே நின்றார் உண்டு
என்றாலும் அல்லாஹ்
உன் கண் இன்றி காண்பார் உண்டோ
ஓஓஓ….
 
ஆண் : ஆகாயமானாலும் அல்லாஹ் நீ இல்லாமல்
தூரல் கிடையாதே
பூலோகம் ஆனாலும் அல்லாஹ்
உன் சொல்லின்றி பூவும் மலராதே
 
அனைவரும் : எல்லாமும் இங்கே அல்லாஹ்வும் நானே ஆகும்
ஈடுயில்லா உன்னை சொன்னாலே இன்பம் கூடும்
இதன் உன் பார்வை செய்கின்ற மாயத்திலே
எங்கேயும் தோன்றாதோ தீபங்களே
தாயும் நீயாகி கை தாங்கும் நேரத்திலே
ஓஓஓ…
 
அனைவரும் : நோய் ஏது நொடி ஏது
நீ இன்றி உயிர் ஏது சொல்
ஆண் : சொல் சொல் சொல் சொல் சொல் சொல் சொல்
 
ஆண் மற்றும் குழு : அன்பாளனே சொல் அருளாளனே சொல்
அன்பாளனே சொல் சொல் சொல்
அன்பாளனே சொல் அருளாளனே சொல்
அன்பாளனே சொல் சொல் சொல்
 
பெண் : …………………
 
 
Συνδέσου ή Κάνε εγγραφή για να δημοσιεύσεις μια μετάφραση
expand collapse Song details
juderegy juderegy
submitted on 12 Φεβ 2024 - 22:27
Συντελεστές: